Healthy Pregnancy Tips: கர்ப்ப காலத்தில் இந்த ஐந்து விஷயங்களை செய்யாதீங்க..! குழந்தைக்கு பிரச்சனையை தரும்!
Pregnancy Risks: கர்ப்ப காலம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சமைக்கப்படாத உணவுகள், நீண்ட நேரம் ஒரே நிலையில் இருத்தல், அதிக காஃபின் உட்கொள்ளுதல், சூடான குளியல், மற்றும் மது அல்லது புகைபிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை கருச்சிதைவு, குறைந்த பிறப்பு எடை, மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலம் (Pregnancy) என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமான காலமாகும். இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களை ஆரோக்கியமான வைப்பது மட்டுமின்றி, வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையையும் ஆரோக்கியமாக பார்த்திகொள்வது முக்கியம். இந்தநேரத்தில், கர்ப்பிணி பெண்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பழக்கமும் கவனமுடன் இருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறிய தவறுகள் கூட குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். மேலும், மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம். அதன்படி, கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத 5 விஷயங்களை (Food Safety) பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
சமைக்கப்படாத உணவுகள்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் பச்சையாகவும், சரியாக வேகாத மற்றும் சமைக்கப்படாத உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதன்படி, சமைக்கப்படாத இறைச்சி, ஆப் பாயில், துரித உணவுகள், கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடக்கூடாது. இதில் இருக்கும் லிஸ்டீரியா, சால்மோனெல்லா மற்றும் டாக்ஸோபிளாஸ்மா போன்ற பாக்டீரியாக்களை உடலில் நுழையச் செய்யும். இவைகள் குழந்தை மற்றும் தாயை நோய்வாய்ப்படுத்தலாம்.
ஒரே நிலையில் அமர கூடாது:
கர்ப்ப காலத்தில் பெண்கள் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமரவோ, நிற்கவோ கூடாது. கர்ப்ப காலத்தில் பெண்கள் நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ அல்லது தொடர்ந்து நின்றாலோ, அது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது கால்களில் வீக்கம், வெரிகோஸ் வெயின்கள் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். எனவே, கர்ப்ப காலத்தில், பெண்கள் ஒவ்வொரு 30 முதல் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.




காஃபின் பொருட்கள்:
கர்ப்ப காலத்தில் அதிகமாக டீ அல்லது காபி குடிப்பதும் ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் அதிகமாக காஃபின் உட்கொள்வது கருச்சிதைவு, குறைந்த பிறப்பு எடை மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் தினமும் ஒன்று முதல் இரண்டு கப் காஃபின் மட்டுமே போதுமானதாக பார்க்கப்படுகிறது. காபி மட்டுமல்லாமல் காஃபின் டீ, சாக்லேட் மற்றும் குளிர் பானங்களில் காணப்படுகிறது. எனவே, அவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
சூடான குளியல்:
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதீத சூடான குளியல் உடல் வெப்பநிலை திடீரென உயர வழிவகுக்கும். இது குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, பெண்கள் மிகவும் சூடான நீரில் குளிப்பதையும், வெப்பமான சூழலில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனை முதல் 3 மாதங்களில் தவிர்ப்பது கருக்கலைப்பை கூட உண்டாக்கலாம்.
மது, சிகரெட் கூடாது:
கர்ப்ப காலத்தில் மது அருந்துவது குழந்தையின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது குழந்தையின் மூளையின் வளர்ச்சியையும் உறுப்புகளின் அமைப்பையும் பாதிக்க செய்யும். பல பெண்கள் கர்ப்ப காலத்தில் சிறிது மது அருந்தலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது தவறானது. எனவே, கர்ப்ப காலத்தில் எந்த அளவிலும் மது அருந்துவது பாதுகாப்பானது அல்ல.