Health Tips: தூங்க செல்லும்முன் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க.. உங்களை தூங்கவிடாமல் செய்யும்..!
6 Foods That Ruin Your Sleep: இரவு நல்ல தூக்கம் அவசியம். ஆனால் சில உணவுகள் தூக்கத்தை பாதிக்கும். பிரைடு ரைஸ், காரமான உணவுகள், சாக்லேட், காபி, டீ, பீன்ஸ் போன்றவை இரவில் சாப்பிடக் கூடாது. இவை ஜீரண பிரச்னைகளை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும். இரவு உணவை லேசாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது நல்ல தூக்கத்திற்கு அவசியம்.

தூக்கம் கெடுதல்
நாள் முழுவதும் ஓடிவிட்டு, சோர்வுடன் வீட்டுக்கு ஒருவர் வரும்போது ஆரோக்கியமான உணவுடன் நல்ல தூக்கத்தை பெற வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவருக்கு ஒருநாள் விட்டுப்போகும் தூக்கம் (Sleeping), அடுத்த 6 நாட்களுக்கு சோர்வை தரும் என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். எவ்வளவு சோர்வாக இருந்தாலும் ஒருவர் படுக்கையில் படுத்தவுடன் எவ்வளவு முயற்சித்தும் தூக்கம் வரவில்லை என்றால், அது அவருக்கு அடுத்த நாளில் பிரச்சனையை தரும். சிலர் சில நேரங்களில் கையில் மொபைல் அல்லது டிவி ரிமோட்டை வைத்து நேரத்தை கடத்துவார்கள். அப்போது, அவர் தூங்க விரும்பினாலும், அவரால் தூங்க முடியாது. மேலும், ஒரு சிலர் தவறான உணவுப் பழக்கத்தால் தூக்கத்தை கெடுப்பார்கள். அதேபோல், நீங்களும் இரவு நேரங்களில் இந்த 6 உணவுகளை (6 Foods) எடுத்துக்கொண்டால், உங்கள் தூக்கம் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம்.
பிரைடு ரைஸ்:
இரவில் வெகுநேரம் விழித்திருப்பது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. சிலருக்கு இது வேலைப்பளு காரணமாகவும், சிலருக்கு இது ஒரு தினசரி வழக்கமாகவும் மாறிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், இரவு நேரம் நீண்ட நேரம் கண் முழிக்கும்போது, அவர்களது வயிறு சாப்பிட ஏதாவது கேட்கும். அந்த நேரத்தில், விரைவாக சமைக்கக்கூடிய ஒரு உணவை தேடுவார்கள். அப்போது, பலருக்கும் சிக்கன் பிரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகள் ஞாபத்திற்கு வரும். பிரைடு ரைஸ் போன்ற உணவுகள் விரைவாகத் தயாரிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் சுவையும் நாக்கிற்கு மகிழ்ச்சியை தரும். இது இரவு நேரத்தில் வயிற்றுப் பசியை தீர்க்கும். ஆனால், இதனால் இரவு தூக்கம் கெட்டுவிடும் என்பது பலருக்கும் தெரியாது. இது மாதிரியான வறுத்த உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது நீங்கள் படுக்கையில் படுத்து தூங்கும்போது, வயிற்றில் கனமாக உணர்வை தரும். அப்போது, உடல் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக கனமான உணவை ஜீரணிப்பதில் முயற்சியை ஏற்படுத்தி, தூக்கத்தைப் பாதிக்கிறது.
காரமான உணவு:
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது. இவற்றை உட்கொள்வது உடலில் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான மசாலாப் பொருட்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால், நீங்கள் படுக்கையில் தூங்கச் செல்லும்போது, இந்தப் பிரச்சினை உங்களைத் தொந்தரவு செய்யும்.
சாக்லேட்:
சாக்லேட்டில் சர்க்கரையுடன் சிறிதளவு காஃபின் உள்ளது. இதில் தியோப்ரோமைனும் உள்ளது. இவை, இரவில் சாக்லேட் சாப்பிட்ட பிறகு, உங்களுக்கு தூங்குவதில் சிரமம் ஏற்படலாம்.
காபி மற்றும் டீ:
தூங்க செல்வதற்கு முன்பு, சிலர் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பார்கள். ஒரு கப் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இவற்றிலிருந்து வரும் காஃபின் உடலில் பல மணி நேரம் இருக்கும். இது தூக்க முறைகளை சீர்குலைக்கும்.
இனிப்புகள்:
சாப்பிட்ட பிறகு சிலருக்கு இனிப்பு எடுத்துகொள்ளும் பழக்கம் உள்ளது. இதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகிவிடும். இருப்பினும், இந்த சுவை இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கும். இது சாப்பிடும் இனிப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கெடுக்கும். இதன் காரணமாக உடலுக்கு ஓய்வு கிடைக்காது. தூக்க முறை தொந்தரவு செய்யப்படுகிறது.
பீன்ஸ்:
பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் கூறுகின்றனர். இரவு உணவில் பருப்பு வகைகளை அதிகமாக உட்கொள்வது வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இத்தகைய சூழ்நிலையில், இரவு உணவை லேசாக வைத்திருக்க வேண்டும்.