இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வரும் பாடல்!
Yen Paattan Saami Varum Song: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

என் பாட்டன் சாமி
நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் ரசிகர்கள் தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. தனுஷின் 52-வது படமான இதனை அவரே எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக 4-வதாக நடிகர் தனுஷ் இயக்கி உள்ள இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த வாரம் முழுவதும் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்களுடன் போஸ்டர்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைப்பெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இட்லி கடை படத்திலிருந்து வெளியானது 3-வது பாடலின் லிரிக்கள் வீடியோ:
இந்த நிலையில் இன்று இட்லி கடை படத்தில் இருந்து என் பாட்டன் சாமி வரும் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவான நிலையில் தனுஷ் இந்தப் பாடலை எழுதியுள்ள நிலையில் பாடகர் ஆண்டனி தாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… கோவா படத்தில அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பிடிச்சு செஞ்சேன் – நடிகர் சம்பத் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A voice from the soil, a hymn for the divine 🙏
Yen Paattan – third single from #IdliKadai out now
A @gvprakash musical🎵♥️
Grand release in theatres on the 1st of October@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya… pic.twitter.com/D0UFqbEA3W
— Wunderbar Films (@wunderbarfilms) September 17, 2025
Also Read… கமல் சார் கூட நடிக்கும் போது அந்த சீன்ல பயந்து அழுதுட்டேன் – நடிகை மீனா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்