ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது – நடிகர் விஷ்ணு விஷால்

Vishnu Vishal: தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஷ்ணு விஷால் ராயன் படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

ராயன் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது - நடிகர் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

Published: 

25 Oct 2025 11:54 AM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் விஷ்ணு விஷால் உட்பட படக்குழுவினர் அனைவரும் திவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து அளித்து வரும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா கெரியரில் பல இடங்களில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். பல இளைஞர்களின் அறிமுகப் படம் அல்லது சிறப்பான நடிப்பை நான் பாராட்டத் தவறியதில்லை. ஆனால் என்னுடைய பலப் படங்களை இங்கு யாரும் அப்படி வெளிப்படையாக பாராட்டவில்லை என்று வருத்தம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தில் சந்தீப் கிஷன் கதாப்பாத்திரத்தில் நான் தான் நடிக்கவேண்டியது:

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியபோது, ராயன் படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தை நான் செய்யவிருந்தேன். சில அம்சங்களுடன் அந்த கதாபாத்திரத்தை எனக்காக மீண்டும் எழுதச் சொன்னேன். தனுஷ் சார் உடனடியாக ஒப்புக்கொண்டார், அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு கால்ஷீட் தேதிகள் பிரச்சனையாக இருந்தது, அதன் காரணமாக ராயன் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு பைசன் – இயக்குநர் சேரன்

நடிகர் விஷ்ணு விஷால் அளித்தப் பேட்டி:

Also Read… மமிதா பைஜுவா இது? இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!