என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது – விஷ்ணு விஷால்

Actor Vishnu Vishal: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ஆர்யன் என்றப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

Published: 

23 Oct 2025 12:49 PM

 IST

வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் விஷ்ணு விஷால். அறிமுகம் ஆன முதல் படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்த விஷ்ணு விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். ஆக்‌ஷன், காமெடி, ரொமாண்டிக் என நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பலப் படங்களை தயாரித்தும் வருகிறார்.

அதன்படி இறுதியாக விஷ்ணு விஷாலில் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆன ஓஹோ எந்தன் பேபி படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது மட்டும் இன்றி அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

எனது படங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் வருத்தம் இருக்கிறது:

அந்த விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் எனக்கு ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது. நான் இளைஞர்களை ஊக்குவிப்பேன், படம் நன்றாக இருந்தால் பாராட்டுவேன், ஆனால் யாரும் என்னை ஊக்குவிக்கவில்லை. படம் நன்றாக ஓடினால், அவர்கள் இயக்குனரை சந்தித்து ஸ்கிரிப்ட் கேட்பார்கள் என்று வெளிப்படையாக பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்

இணையத்தில் கவனம் பெறும் விஷ்ணு விஷால் பேச்சு:

Also Read… மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்