Vishnu Vishal: ஆமிர்கான் சார் கூலி படத்தை பற்றி அப்படி சொல்லவே இல்லை.. விஷ்ணு விஷால் விளக்கம்!
Vishnu Vishal About Aamir Khan: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் ஆர்யன் படமானது வெளியீட்டிற்கு காத்திருகிறது. இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், ஆமிர்கான் கூலி படத்தை பற்றி அவதூறாக கூறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் ஆர்யன் (Aaryan). இந்த படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் பிரவீன் கே (Praveen K) இயக்கியுள்ளார். இந்த் படமானது வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், இதில் அவருடன் நடிகர்கள் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியிருந்தார். அந்த சந்திப்பில் அவர், “கூலி (Coolie) திரைப்படத்தில் நடித்ததற்காக ஆமிர்கான் (Aamir Khan) வருத்தப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது. அவர் அவ்வாறு கூறவில்லை” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: டியூட் பட வசூல் சாதனை… ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன்!
ஆமிர்கான் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசிய விஷயம்
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷ்ணு விஷால், “கூலி திரைப்படத்தில் நடித்தது வருத்தமாக இருக்கிறது என்று, ஆமிர்கான் பேசியதாக வெளியான பேட்டி பொய்யானது. அவர் அவ்வாறு எந்த செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி அளிக்கவில்லையாம். கூலி படம் பற்றி அவர் பேசியதாக தகவல் வெளியானபோது அவருக்கு அதை அனுப்பி, இது உண்மையா என அவரிடம் கேட்டேன்.
இதையும் படிங்க: என்னுடைய படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதில் ஒரு சிறிய வருத்தம் இருக்கிறது – விஷ்ணு விஷால்
அதற்கு அவர், நான் இதுபோல எந்த பேட்டியே கொடுக்கவில்லை என்று என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து அவரின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் உண்மையிலே கூலி படத்தில் ரஜினிகாந்த் சாருக்காகத்தான் நடித்தார்” என அந்த சந்திப்பில் நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் வெளியிட்ட ஆர்யன் படத்தின் ட்ரெய்லர் குறித்தான எக்ஸ் பதிவு :
This one’s really close to my heart. A new experience awaits you in theatres on October 31st.#AARYAN – TRAILER out now.
Tamil ▶️ https://t.co/zeA0of7iRi
Telugu ▶️ https://t.co/Csbd6IzT8m pic.twitter.com/IH9dz2u6fi— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) October 19, 2025
இந்த ஆர்யன் படமானது. விஷ்ணு விஷாலின் நடிப்பில் ராட்சசன் படத்திற்கு பிறகு வெளியான ஆக்ஷ்ன் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இதில் நடிகர் செல்வராகவன்தான் முக்கிய வில்லனாக நடித்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.