இன்னைக்கு கல்யாணமே நடந்து இருக்கும்… ஆனால் – விஷால் சொன்ன விசயம்!

Actor Vishal: நடிகர் விஷால் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார். அது என்ன என்றால் நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் இன்று திருமண நிச்சயம் நடந்ததுதான்.

இன்னைக்கு கல்யாணமே நடந்து இருக்கும்... ஆனால் - விஷால் சொன்ன விசயம்!

விஷால் - சாய் தன்ஷிகா

Published: 

29 Aug 2025 18:56 PM

 IST

இன்று கோலிவுட் சினிமாவில் அதிகம் பேசப்படும் செய்தி நடிகர் விஷால் (Actor Vishal) திருமண நிச்சயம் குறித்து தான். ஆம் இன்று விஷால் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகை சாய் தன்ஷிக உடன் திருமண நிச்சயம் நடைப்பெற்றது. முன்னதாக நடிகை சாய் தன்ஷிகாவில் யோகிடா படத்தின் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் சாய் தன்ஷிகா உடனான காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த காதல் எப்படி தொடங்கியது என்று தெரியவில்லை. விரைவில் எங்களுக்கு திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து அப்போது பேசிய நடிகர் விஷால் எனது பிறந்த நாளில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்று சாய் தன்ஷிகா விருப்படுகிறார். அதற்குள் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிந்துவிட்டால் நிச்சயம் உங்க அனைவருக்கும் நல்ல செய்தி சொல்வேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் காலை தனக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எளிமையான முறையில் இந்த நிச்சயதார்த்த நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகு வருகின்றது.

திருமணமே நடக்கவேண்டியது இன்று – நடிகர் விஷால் சொன்ன விளக்கம்:

நிச்சதார்த்த நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் இதுதான் நான் பேச்சுளராக கொண்டாடும் கடைசிப் பிறந்த நாள். இன்றுதான் எனக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் திருமன நிச்சயம் நடைப்பெற்றது. வாழ்த்து தெரிவித்த உங்க அனைவருக்கும் நன்றி.

இந்த நிச்சயதார்த்த மோதிரத்தில் சாய் தன்ஷிகாவின் பெயர் இருக்கு என்று காட்டிய விஷால், தன்ஷிகாவிடம் நான் வேண்டுகோள் வைத்தேன். இன்னும் இரண்டு மாதத்தில் நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று. எனது பிறந்த நாளில் திருமணம் செய்ய அவர் ஆசைப்பட்டார். ஆனால் எனது வேண்டுகோளை ஏற்று காத்திருக்க சம்மதித்தார்.

9 ஆண்டுகளாக நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் முடிவடைய காத்து இருந்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடையும். விரைவில் திருமண தேதியை அறிவிக்கிறேன் என்று நடிகர் விஷால் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். நடிகர் சங்க கட்டிடத்திற்காக விஷால் ஏன் திருமணத்தை ஒத்திவைத்தார் என்பது தெரியாதவர்களுக்காக கூறுகிறோம், நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் தரப்பினர் நடிகர் சங்க கட்டிடப் பணியை விரைந்து முடிப்போம் என்று உறுதியளித்தனர்.

Also Read… ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்

மேலும் அந்த கட்டிடம் கட்டி முடித்ததும் அதில் தனது திருமணம் தான் முதலில் நடக்கும் என்று நடிகர் விஷால் உறுதியளித்து இருந்தார். அதன் கரணமாகவே நடிகர் விஷால் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் விஷாலின் பேட்டி:

Also Read… LCU-வில் இணையும் நடிகர் ரவி மோகன் – வைரலாகும் தகவல்