விக்ரம் பிரபுவின் சிறை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Sirai Movie X Review: நடிகர் விக்ரம் பிரபு மீண்டும் போலீஸாக நடித்து திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ள படம் சிறை. இந்தப் படத்தினை இன்று திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். அதனை தற்போது பார்க்கலாம்.

விக்ரம் பிரபுவின் சிறை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

சிறை படம்

Published: 

25 Dec 2025 18:00 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பல வாரிசு நடிகர்கள் தற்போது நடித்து வருகின்றனர். அப்படி வாரிசு நடிகர்களின் பட்டியளில் உள்ளவர் தான் நடிகர் விக்ரம் பிரபு. தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனைத்து விதமான கதைகளிலும் பொறுந்தக்கூடிய நடிகராக தற்போது சினிமாவில் வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து இன்று 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சிறை. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு உடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர்கள் எல்கே அக்ஷய் குமார், ஆனந்த தம்பிராஜா, அனிஷ்மா அனில்குமார் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் சிறை படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதனை தற்போது பார்க்கலாம்.

சிறை படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சிறை படம் ஒரு தங்கம். அருமையான நடிகர்கள் மற்றும் நடிப்புகளுடன் கூடிய கவர்ச்சிகரமான திரைப்படம். திரையில் மையக் கதாபாத்திரங்களை நீங்கள் கடைசியாக எப்போது தேர்ந்தெடுத்தீர்கள், அவர்கள் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நீங்கள் தீவிரமாக விரும்பினீர்கள்? காதல் மற்றும் மைனா போன்ற படங்கள் மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. இந்தப் படம் அவ்வளவு ஆழமான உணர்வைத் தருகிறது.

சிறை படத்தின் எக்ஸ் விமர்சனம்:

படம் முழுவதும் பதற்றத்தைத் தக்கவைக்கும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் சிறை. இதனை திரையரங்குகளில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும்.

சிறை படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சிறை நிச்சயம் பார்க்க வேண்டிய படம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசை பெரிய பலமாக உள்ளது. மற்றும் இயக்குநர் தமிழ் எழுத்து மற்றும் திரைக்கதை மிகவும் சிறப்பாக உள்ளது.

சிறை படத்தின் எக்ஸ் விமர்சனம்:

சிறை திரைப்படம், தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த காவல் துறை சார்ந்த திரில்லர் படங்களில் ஒன்றாகும். சிறந்த உள்ளடக்கத்தை வழங்கத் தவறியதற்காகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விமர்சிக்கப்படும் இந்த காலகட்டத்தில், இது போன்ற படங்களுக்கு ஆதரவளிப்பது பார்வையாளர்களின் கடமையாகிறது. அறிமுகமாகும் அனைத்து புதிய திறமைகளுக்கும் வாழ்த்துகள்.

Also Read… தணிக்கைகுழுவின் அறிவுறுத்தல்… பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படக்குழு

சிறை படத்தின் எக்ஸ் விமர்சனம்:

இது போலிஸ்- கைதியை பற்றிய படம்னு சொல்றதை விட எமோஷ்னல் லவ் ஸ்டோரினு சொல்லலாம். மீண்டு ஒருமுறை இயக்குநர் தமிழ் தனது எழுத்தை நிரூபித்துவிட்டார். விம்ரம் பிரபுவின் கதாப்பாத்திரம் மற்றும் நடிப்பு வேற லெவல். விக்ரம் பிரபுவின் 25வது படத்தில் அமைந்த மாதிரி வேற எந்த படத்திலையும் இண்ட்ரோ சீன் இல்லை.

Also Read… கர்ப்பிணிகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை… மலையாளத்தில் இந்த ஒண்டர் உமன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..