ஆட்டம் தொடங்கியது… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

Jana Nayagan: தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆட்டம் தொடங்கியது... ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

ஜன நாயகன்

Updated On: 

06 Nov 2025 15:51 PM

 IST

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் நடிகர் தளபதி விஜய் (Actor Thalapathy Vijay) நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன். இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கியுள்ள நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள காரணத்தால் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இதன் காரணமாகவே ரசிகர்கள் இந்த ஜன நாயகன் படத்தின் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்துள்ளனர். இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இந்த தயாரிப்பு நிறவம் முதன் முறையாக படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே படத்தின் அறிவிப்பு வெளியான போது நடிகர் விஜய்க்கு ஃபேர்வல் கொடுப்பது போல ஒரு வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டது கேவிஎன் தயாரிபு நிறுவனம். அந்த வீடியோ விஜய் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விடும் காட்சிகளும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்:

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வெளி நாட்டில் தான் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் போஸ்டரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது.

Also Read… மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்… வைரலாகும் டைட்டில் டீசர் வீடியோ

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரஜினிகாந்த – கமல்ஹாசனின் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…