ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் தலைப்பு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Jana Nayagan Movie: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் அப்டேகள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

ஜன நாயகன்
தளபதி விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நாயகனாக வலம் வருகிறார். இவருக்கு ரசிகர்கள் எத்தனை கோடிகள் என்று அளந்துவிட முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று கூறுவது மிகையாகாது. தமிழ் சினிமாவில் இயக்குநரின் மகனாக அறிமுகம் ஆகி நாயகனாக இத்தனை ஆண்டுகள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகர் விஜய் போட்ட உழைப்பு அனைவரும் அறிந்ததே. அவரின் நடிப்பிற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது போல அவரது நடனத்திற்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மக்கள் மத்தியில் மட்டும் இன்றி சினிமா பிரபலங்கள் பலர் தாங்கள் விஜயின் நடிப்புக்கு மட்டும் இல்லாமல் நடனத்திற்கும் பிகப்பெரிய ரசிகர்கள் என்று பலப் பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.
கோலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகர்களின் பட்டியளில் முதலாவது இடத்தில் இருக்கும் நடிகர் விஜய் தனது நடிப்பு மற்றும் இத்தனை கோடிகள் சம்பளம் அனைத்தையும் விட்டுவிட்டு தமிழக மக்களுக்காக அரசியலில் குதித்தார். தன்னை இவ்வளவு பெரிய நடிகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அரசியலில் களம் இறங்கி அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே அவரது என்னம் என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் தான் அவரது நடிப்பில் இறுதியாக வெளியாகும் படம் என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.
தளபதி கச்சேரி ஆரம்பம்… உற்சாகத்தில் ரசிகர்கள்:
இந்த நிலையில் விஜயின் கடைசிப் படம் ஜன நாயகன் என்பதல் கோலிவுட் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பெயர் தளபதி கச்சேரி என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பாடம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடலில் விஜயுடன் இணைந்து நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு இருவரும் நடனம் ஆடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே பாடலின் லிரிக்கள் வீடியோ!
இணையத்தில் கவனம் பெறும் ட்விட்டர் பதிவு:
#JanaNayagan
– First single Thalapathy Kacheri song, choreographed by #SekharMaster 🕺
– #PoojaHegde & #MamithaBaiju are part of this song💃
– The team is planning to release it on Diwali ✅
In Cinemas JAN 9th, 2026#ThalapathyVijay pic.twitter.com/GgQ6GEI6Id— Movie Tamil (@_MovieTamil) August 29, 2025
Also Read… ரவி மோகன் தயாரிக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இதோ!