விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன் – விஜய் சேதுபதி ஓபன் டாக்

Vijay Sethupathi Talks About Vikram Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விக்ரம் படத்தில் வரும் இண்ட்ரோ காட்சிக்கு பயந்தது குறித்து வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன் - விஜய் சேதுபதி ஓபன் டாக்

விஜய் சேதுபதி

Published: 

14 Mar 2026 11:02 AM

 IST

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. மேலும் அவரது நடிப்பில் புதிதாக உருவாக உள்ள படங்களின் அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பாக்கெட் நாவல். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

இந்த பாக்கெட் நாவல் படத்தின் மூலம் இவர்களின் கூட்டணி இரண்டாவது முறையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அளித்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன்:

அந்தப் பேட்டியில் விஜய் சேதுபதி கூறியதாவது, விக்ரம் படத்தில் இண்ட்ரோ காட்சியில் என்னை ரசிகர்கள் கிண்டலடிப்பார்கள் என்று லோகேஷிடம் கூறினேன். குண்டாகவும் பருமனாகவும் உள்ள என்னை அந்த காட்சியில் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் லோகேஷ் அந்த காட்சி நிச்சயம் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். மேலும் அந்த காட்சி அனிருத் இசையில் மிகவும் மாசாக இருந்தது என்றும் அந்தப் பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்து இருந்தார். மேலும் அது அஜித் மற்றும் விஜயின் இண்ட்ரோ காட்சிகள் போல மாசாக இருந்தது என்றும் தெரிவித்து இருந்தது குறிபிடத்தக்கது.

Also Read… எம்.ஜி.ஆர் குறித்து தவறான கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர்… எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால்

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு:

Also Read… விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் தனுஷ் 55 படம்… சென்னையில் தொடங்கியது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..