VD: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்… கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ!

Vijay Deverakonda Birthday Celebration: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்திவரும் நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இன்று 2026 மே 9ம் தேதியில் தனது 37வது பிறந்தநாளை அவர் கொண்டாடிவரும் நிலையில், வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

VD: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்... கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா - வைரலாகும் வீடியோ!

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Updated On: 

09 May 2026 16:50 PM

 IST

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இளம் நாயகனாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவர் இதுவரைக்கும் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், இறுதியாக கிங்டம் (Kingdom) என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இதையடுத்து தற்போது இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் அடுத்தடுத்து தயாராகிவருகிறது. விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rshmika Mandanna) இருவருமே கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அந்த வகையில் இருவருமே அவரவர் படங்களில் பிசியாக நடித்துவருகிறார்கள். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு இராகு இருவருமே ஜோடியாக ரணபாலி (Ranabaali) என்ற படத்தில் ஜோடியாக நடித்துவருகிறார்கள்.

அந்த வகையில் இன்று 2026 மே 09ம் தேதியில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவரின் வீட்டிற்கு முன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், ரசிகர்களுடன் கேக் வெட்டி விஜய் தேவரகொண்டா பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சூதாட்டம் கதைக்களத்தில்.. துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா தொடர்பான வீடியோ பதிவு:

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் குவிந்தனர் அந்த வகையில் அவர்களை வீட்டினுள்ளிருந்தே கையசைத்து, விஜய் தேவரகொண்டா நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவருக்காக ரசிகர்கள் கொண்டுவந்த கேக்கை வேற்றுவதற்காக, அவர்களை நேரில் சந்தித்திருந்தார். பின் ரசிகர்களுடன் உற்சாகமாக கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ரணபாலி படக்குழு

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் ரணபாலி மற்றும் ரௌடி ஜனார்தனா என இரு படங்கள் தயாராகிவருகிறது. இதில் ராணாபாலி திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விஜய் தேவரகொண்டா தற்போது ரௌடி ஜனார்தனா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ரவி கிரண் கொல்லா இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துவருகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி