Pookie: மருமகனை ஹீரோவாக்கிய விஜய் ஆண்டனி… வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Pokkie Movie First Look : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் , இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் விஜய் ஆண்டனி. இவர் தனது சகோதரியின் மகன் அஜய் திஷான் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

பூக்கி திரைப்படம்
நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த இவர், பின் நடிகராகவும் படத்தில் நடிக்க தொடங்கினார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் (Naan) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து, தற்போது வரையிலும் படங்களில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார் . மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக மார்கன் (Maargan) என்ற படமானது வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தனது படங்களை மட்டும் தயாரித்துவந்த விஜய் ஆண்டனி, தற்போது மற்ற ஹீரோ படங்களையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அவர் தனது சகோதரியின் மகன் அஜய் திஷான் (Ajay Dishan) ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
நடிகர் அஜய் திஷான் ஏற்கனவே, விஜய் ஆண்டனியின் மார்கன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து “பூக்கி” (Pookie) என்ற புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ரிலீசிற்கு தயாராகும் மதராஸி.. ரசிகர்களை கவரும் ‘தங்கப்பூவே’ லிரிக்கல் பாடல்!
நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள பூக்கி படத்தின் பர்ஸ்ட் லுக் பதிவு :
Here’s the First look of everyone’s favourite #Pookie 🎀😊
Tamil – Telugu
Shoot in progress | In cinemas 2026@vijayantonyfilm @GC_Begins @AJDhishan990 #Dhanusha @mrsvijayantony#vijayantony #vijayantonyfilmcorporation #ajaydhishan #love #romcom #PookieTheMovie pic.twitter.com/SBxFEAtoeA
— vijayantony (@vijayantony) September 2, 2025
நடிகர் அஜய் திஷான், இந்த பூக்கி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பூக்கி என்ற திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்க, விஜய் ஆண்டனி தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் அஜய் திஷானுக்கு ஜோடியாக அறிமுக நடிகை தனுஷா நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க : 9 வருடத்தில் 6 படங்கள்.. நான் பெருமையாக சொல்வேன்- லோகேஷ் கனகராஜ்!
இந்த பூக்கி படத்தின் முதல் பார்வை செப்டம்பர் 2, 2025 இன்று வெளியாகியிருக்கும் நிலையில், இந்த படத்தின் பூஜையும் இன்று 2025 செப்டம்பர் 2 ஆம் தேதியில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பூக்கி திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை வீடியோ
#Pookie 🎀😊 pooja chennai
Tamil – Telugu @vijayantonyfilm @GC_Begins @AJDhishan990 #Dhanusha @mrsvijayantony#vijayantony #vijayantonyfilmcorporation #ajaydhishan #love #romcom #PookieTheMovie@teamaimpr pic.twitter.com/myDc4UBqr9
— Meenakshi Sundaram (@meenakshinews) September 2, 2025
இந்த பூக்கி திரைப்படமானது ரொமாண்டிக் காமெடி கதைக்களம் கொண்ட படமாக உருவாகவுள்ளதாம். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனிதான் இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகவுள்ளது. நடிகர் அஜய் திஷானுக்கு இதுதான் அறிமுக படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.