சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்
Sivakarthikeyan 26 Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தின் பணிகளில் பிசியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 26-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நடிகர் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி உள்ளார். படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பீரியட் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா முரளி இருவரும் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ள நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், ராணா டகுபதி, குரு சோமசுந்தரம், பிரித்வி ராஜன் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 3-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு நடைபெறும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்து இருந்தார். இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள 26-வது படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.




சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்?
இந்த நிலையில் பராசக்தி படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது. மேலும் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைந்தால் படத்தில் நடிப்பது குறித்து உறுதியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… The Raja Saab: பிரபாஸின் ஹாரர் காமெடி.. வெளியானது ‘தி ராஜா சாப்’ பட 2வது ட்ரெய்லர்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SK26 – Apart from #SivaKartikeyan, there is a great scope for another character🔥. #VijayAntony has been approached for that role, but salary terms didn’t match with the team💰. So the team is considering to approach another star Hero for the role🤝🌟
A Grand futuristic film… pic.twitter.com/tQpglnpqMq— AmuthaBharathi (@CinemaWithAB) December 29, 2025
Also Read… பராசக்தி படத்திற்கு பல பிரச்னைகள் வந்தது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்