லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி இதுவா? வைரலாகும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

Love Insurance Kompany Movie Release Update: தமிழ் சினிமாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் வெளியீடு தேதி குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி இதுவா? வைரலாகும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

Published: 

17 Mar 2026 20:02 PM

 IST

தமிழ் சினிமாவில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இந்தப் படத்தினை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் நானும் ரௌடி தான். இதில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிலையில் தொடர்ந்து படம் வெளியாகாமல் தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி இதுவா?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகின்றது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு தேதியை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டுள்ளார். அதில் ஏப்ரல் மாதம் 4-ம் தேதியை குறிப்பிட்டுள்ளார். அந்த தேதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… டிமான்டி காலனி 3 திரைப்படம்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Suriya: 20 வயது வித்தியாசத்திலும் காதல்… வெளியானது சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர்!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்