Jailer 2 : ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்? அட இவர்களா?

Jailer 2 Movei Cast Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 172வது திரைப்படமாக உருவாகிவருவது ஜெயிலர் 2 படம். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இந்த படமானது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகிவருகிறது, இப்படத்தில் பிரபல நடிகைகள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Jailer 2 : ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்? அட இவர்களா?

ஜெயிலர் 2 திரைப்படம்

Updated On: 

30 Aug 2025 21:34 PM

 IST

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர் (Jailer). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) இணைந்து நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மிர்னா மேனன், சிவராஜ் குமார், மோகன்லால் உட்பட பல்வேறு பிரபல நடிகர்கள் இணைந்த நடித்திருந்தனார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படமானது தயாராகிவருகிறது. இப்படத்தையும் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இவர்களுடன் மேலும் சில நடிகைகள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த நடிகைகள் வேறு யாருமில்லை, அஜித்தின் (Ajith) நேர்கொண்ட பார்வையில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வித்யா பாலனும் (Vidya Balan), நடிகை ஷம்னா காசிம் (Shamna kasim) (பூர்ணா) -வும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஜன நாயகனில் எனது முதல் காட்சியே விஜய் சாருடன்தான் – மமிதா பைஜூ பேச்சு!

நடிகை வித்யா பாலனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை வித்யா பாலன் பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!

நடிகை ஷாம்னா காஸிமின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை ஷாம்னா காசிம் (பூர்ணா) தமிழ் சினிமாவில் பல படங்ககளில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்ககளில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக கடந்த 2024ம் ஆண்டு டெவில் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது ஜெயிலர் 2 படத்திலும் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இவருக்கு இப்படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..