சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரப் படமாக இருக்கும் – வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

Director Venkat Prabhu: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரப் படமாக இருக்கும் - வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்!

வெங்கட் பிரபு

Published: 

11 Aug 2025 11:12 AM

இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இவர் இதில் அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விஜயுடன் இணைந்து நடிகர்கள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம், வைபவ், மோகன், பிரேம்ஜி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டரெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக தாமதம் ஆகியது. மேலும், சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்து படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாகிவிட்டார். இதனால் வெங்கட் பிரபு உடனான படம் கைவிடப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலானது. இந்த நிலையில் படம் கைவிடப்படவில்லை என்பது வெங்கட் பிரபுவின் சமீபத்திய பேட்டி உறுதி செய்தது.

வெங்கட் பிரபுவின் கதையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சிவகார்த்திகேயன்:

அதன்படி இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ள படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதவது, சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரப் படமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி முடிக்கப்பட்டு, மிகவும் சிறப்பாக வந்துள்ளது. கதையைக் கேட்ட சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியடைந்தாட். இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் ஒரு காமெடியான படமாக இருக்கும் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்து இருந்தார்.

Also Read… அனிருத் சினிமாவிற்கு வர நான் காரணம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விசயம்!

இணையத்தில் கவனம் பெறும் வெங்கட் பிரபு பேச்சு:

Also Read… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாலினி என்ன மிரட்டுவாங்க – மாதவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!