சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது உயிரே உயிரே பாடல் வீடியோ

Uyire Uyire Lyrical Song From Sattendru Maarudhu Vaanilai Movie | நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இந்தப் படத்தில் இருந்து உயிரே உயிரே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது உயிரே உயிரே பாடல் வீடியோ

சட்டென்று மாறுது வானிலை

Published: 

11 May 2026 19:05 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜெய். ஆரம்ப காலக்கட்டத்தில் இவர் படங்களில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் படங்களில் கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். காமெடி, ஆக்‌ஷன் செண்டிமெண்ட் என நடிகர் ஜெய் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இரண்டு இணையதள தொடர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் ஜெய் நடிப்பில் இறுதியாக பேபி அண்ட் பேபி படம் திரையரங்குகளில் வெளியானது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. அதில் குறிப்பாக முதலாவதாக சட்டென்று மாறுது வானிலை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜெய் படத்திலிருந்து வெளியானது உயிரே உயிரே பாடல் வீடியோ:

இயக்குநர் பாபு விஜய் எழுதி இயக்கிய இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் லவ் ஆக்‌ஷன் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து உயிரே உயிரே என்ற பாடல் வீடியோ வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாடல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜீவா – கோகுல் கூட்டணி

நடிகர் ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஊழல்.. சாராயம் காச்சினால் நல்ல அரசியல்வாதியா? விஜய்க்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி