ஜன நாயகன் மற்றும் கருப்பு படத்தின் நிலமை என்ன? ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

Jana Nayagan and Karuppu Movie Update: தமிழ் சினிமாவில் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தும் பல மாதங்கள் ஆகியும் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் படங்கள் ஜன நாயகன் மற்றும் கருப்பு. இந்தப் படங்கள் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ஜன நாயகன் மற்றும் கருப்பு படத்தின் நிலமை என்ன? ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

ஜன நாயகன் மற்றும் கருப்பு

Published: 

15 Mar 2026 12:29 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்து தற்போது வரை திரையரங்குகளில் வெளியாக படங்கள் ஜன நாயகன் மற்றும் கருப்பு. இதில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் சென்சார் பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை நீட்டித்துக்கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளதால் இதுதான் அவரது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி அறிவிக்கப்பட்ட படம் தற்போதுவரை திரையரங்குகளில் வெளியாக முடியாமல் சிக்கலில் இருப்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நடிகர் சூர்யா நடிப்பில் 45-வது படமாக உருவாகி உள்ள கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தும் தற்போது வரை படக்குழு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஒவ்வொரு மாதமும் சினிமா வட்டாரங்களில் ஒவ்வொரு தேதி வைரலாகி வந்தாலும் கருப்பு படக்குழு படத்தின் வெலியீட்டில் ஒரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் மற்றும் கருப்பு படத்தின் நிலமை என்ன?

இந்த நிலையில் ஜன நாயகன் குறித்து முன்னதாக வெளியான தகவல் என்ன என்றால் சென்சார் கிடைத்ததும் தேர்தலுக்கு முன்பாக படத்தை வெளியிட முடியவில்லை என்றாலும் தேர்தல் முடிந்ததும் அந்த தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே போல கருப்பு படத்தில் தற்போதைய தகவலின்படி தேர்தலுக்கு பிறகே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று 15-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டிற்காக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கருப்பு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… Sivakarthikeyan: வெக்கேஷனுக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!

இணையத்தில் வைரலகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வேள்பாரி படத்திற்காக தனுஷிடம் இயக்குநர் சங்கர் வைத்த கோரிக்கை… என்ன தெரியுமா?

Follow Us
நேதாஜியின் தொப்பியை காணவில்லை - பேரன் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பாக செல்லலாம் - அனுமதி வழங்கிய ஈரான்
இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்காவில் 400 ஆண்டுகள் சிறை தண்டனை
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - இன்ஃபோசிஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு