ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு

Character posters for Jayaram and Prithivi Pandiarajan Kara Movie: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள கர படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் இன்று ஜெயராம் மற்றும் பிரித்வி பாண்டியராஜின் போஸ்டர்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெயராம் - பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை வெளியிட்டது கர படக்குழு

கர

Published: 

26 Mar 2026 18:25 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படம் தான் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பி நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஸ்ஷனல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் இந்தப் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் மமிதா பைஜூ உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டியராஜன் மற்றும் ஜெயராம் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் முன்னதாக நடிகர்கள் மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோரின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.

ஜெயராம் – பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்கள் இதோ:

இந்த நிலையில் இன்று கர படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஜெயராம் மற்றும் பிரித்வி பாண்டியராஜனின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜெயராம் முத்து செல்வன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடிகர் பிரித்வி பாண்டியராஜன் முருகேசன் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளதாக கர படக்குழு அதிகராப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜெயம் ரவிக்கும் – ரவி மோகனுக்கும் உள்ள வித்யாசம் என்ன? அவரே சொன்ன விசயம்

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் லீடர் படம்!

Follow Us
Related Stories
காமெடி ட்ராமா பாணியில் ஒரு தமிழ் வெப் சீரிஸ் பார்க்கனுமா? இந்த லோக்கல் டைம்ஸ் சீரிஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
நல்ல கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைச்சு இருக்காங்கன்னு எங்களுக்காக வந்து நின்னாரு கமல் சார் – இயக்குநர் பிரபு சாலமன் எமோஷ்னல் பேச்சு
மேடி படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட ரியோ ராஜ்!
ஹேப்பி ராஜ் முதல் சாத்தான் வரை… நாளை மார்ச் 27-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் நடைபெறாதா? இணையத்தில் வைரலாகும் தகவல்
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..