காந்தா படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த துல்கர் சல்மான்

Kaantha Movie: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் படம் காந்தா. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ ரிலீஸ் குறித்து அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

காந்தா படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த துல்கர் சல்மான்

காந்தா

Published: 

21 Oct 2025 17:09 PM

 IST

மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகராக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகும் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் படம் காந்தா. இந்தப் படம் பீரியட் ட்ராமாவாக உருவாகி வருகின்றது. படம் முன்னதாக செப்டம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழு ஒத்திவைத்தது. இந்த நிலையில் படம் நவம்பர் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை வெளியாகிறது காந்தா படத்தின் முதல் சிங்கிள்:

இந்த நிலையில் இன்று நடிகர் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காந்தா படத்தின் முதல் சிங்கிள் வீடியோ எப்போது வெளியாகிறது என்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை மாலை 4.30 மணிக்கு கண்மணி நீ என்ற பாடலின் சிங்கிள் வீடியோ வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த எக்ஸ் தள பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!