ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது – திரையரங்குகளில் வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்

7 Years Of Kanaa Movie : தமிழ் சினிமா ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கனா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு கனவுடன் தொடங்கிய பயணம் பல இதயங்களில் இடம் பிடித்தது - திரையரங்குகளில்  வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்

கனா படம்

Updated On: 

21 Dec 2025 16:44 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 21-ம் தேதி டிசம்பர் மாதம் 2018-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கனா. ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் அருண் ராஜா கமராஜ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கனா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், கீர்த்திகா, இளவரசு, ராமா, காளி பிரசாத் முகர்ஜி, ராம்தாஸ், நமோ நாராயணா, பாலாஜி வேணுகோபால், வணக்கம் கந்தசாமி, பிளேட் சங்கர், சீனு வாசன், சவரி முத்து, சேதுபதி, ஆண்டனி பாக்யராஜ், குணா, அசோக் குமார், சத்யா என்.ஜே. அருவி பாலாஜி, சிவமாறன், பிரதீப் துரைராஜ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன்ஸ் சார்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

7 ஆண்டுகளைக் கடந்தது கனா படம்:

இந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தந்தை சத்யராஜ் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தை பார்த்து வருகிறார். இதன் காரணமாக சிறுவயதில் இருந்து அதனைப் பார்த்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

தொடர்ந்து விவசாய கடனில் பாதிக்கப்பட்டு இருக்கும் சத்யராஜ் அந்த கடனை எல்லாம் அடைத்தாரா? ஐஸ்வர்யா ராஜேசின் கிரிக்கெட்டர் கனவு நிறைவேறியதா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழு இது தொடர்பாக எஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார்.

Also Read… Happy Raj: கலக்கல் காமெடி ஜானரில்…வெளியானது ஜி.வி. பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட புரோமோ வீடியோ!

கனா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சாண்ட்ராவிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்