நடிகை கயடு லோஹரின் பர்த்டே ஸ்பெஷல்… தொடர்ந்து வெளியாகும் வீடியோ மற்றும் போஸ்டர்ஸ்
Kayadu Lohars Birthday Special Updates Viral On Social Media: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை கயடு லோஹர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து படக்குழுவினர் போஸ்டர்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கயடு லோஹர்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையகா வலம் வருபவர் நடிகை கயடு லோஹர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டிராகன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்து இதயம் முரளி, இம்மார்டல் மற்றும் எஸ்டிஆர் 49 ஆகியப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையளப் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதன்படி தெலுங்கு சினிமாவில் தி பாரடைஸ் என்ற படத்திலும் மலையாள சினிமாவில் பள்ளிச்சட்டம்பி, ஐயம் கேம் மற்றும் தாரம் ஆகியப் படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கயடு லோஹர் இன்று தனது 26-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் கயடு லோஹரின் பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்ஸ்:
இந்த நிலையில் கயடு லிஓஹர் நாயகியாக நடித்து வரும் தி பாரடைஸ் மற்றும் இதயம் முரளி ஆகியப் படங்களில் இருந்த் போஸ்டர்ஸ் மற்றும் வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளர். அது தற்போது ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் மற்ற படங்கள் தொடர்பான அப்டேட்கள் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read… மிஸ்டர் எக்ஸ் படம் இப்படிதான் இருக்கும் – நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேச்சு
தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The star that never shined…
వెండితెర పై వెలగని తార..💫Meet Subbu…Subbalakshmi from the world of #TheParadise ✨
Wishing the incredible @11Lohar a very Happy Birthday 🫶
GRAND RELEASE WORLDWIDE ON AUGUST 21st, 2026 ❤🔥#JadalZamanaFromAug21
Natural Star @NameisNani in… pic.twitter.com/2NlvMxLqfb
— THE PARADISE (@TheParadiseOffl) April 11, 2026
இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
She’s all about grace, shine and smiles ❤️
Wishing @11Lohar a very happy birthday, from the team of #IdhayamMurali. pic.twitter.com/cR0TUeVo87
— DawnPictures (@DawnPicturesOff) April 11, 2026
Also Read… LIK படத்தின் வரவேற்பு.. திரையரங்கில் எமோஷனலான பிரதீப் ரங்கநாதன் – வீடியோ இதோ!