சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டி55 படக்குழு

Dhanush 55 Movie Team Posted A Birthday Wish For Sai Pallavi : தென்னிந்திய சினிமாவில் மட்டும் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சாய் பல்லவி தற்போது பான் இந்திய சினிமாவிலும் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டி55 படக்குழு

சாய் பல்லவி

Published: 

09 May 2026 17:44 PM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் கங்கனா ரனாவத் இருவரும் இணைந்து நடித்த தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து படங்கள் எதிலும் நடிக்காமல் தொடர்ந்து தனது படிப்பி கவனம் செலுத்தி வந்தார். மேலும் நடிகை சாய் பல்லவி டாக்டர் படிப்பை முடித்து இருந்தாலும் தனது படிப்பிற்கான வேலை எதுவும் செய்யாமல் படங்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் இவர் நாயகியாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இன்றி சாய் பல்லவியின் கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் அதிக அளவில் நடித்து வந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் ஏக் தீன் என்ற படம் இந்தி சினிமாவில் வெளியான நிலையில் அடுத்ததாக ராமாயணா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன டி55 படக்குழு:

தொடர்ந்து பான் இந்திய அளவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டி55 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலமாக சாய் பல்லவி தனுஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து போராடும் நாயகி – ஓடிடியில் காணக் கிடைக்கிடைக்கும் சரஸ்வதி படம் எப்படி இருக்கு?

தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மலையாளம் டூ தமிழ் சினிமா.. மணிரத்னம் இயக்கத்தில் 3 படங்களில் நடித்த இந்த சிறுமி எந்த நடிகை தெரியுமா?

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி