மணிரத்னத்தினத்தின் படம் குறித்து அப்டேட் சொன்ன தமிழ் பிரபா – உற்சாகத்தில் ரசிகர்கள்
Director Maniratnam next Movie: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

மணிரத்னம் மற்றும் தமிழ் பிரபா
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam). இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பான் இந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் பலர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதை ஒரு கனவாகவே வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் பல பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி மணிரத்னம் படத்தில் நடிக்க ஒரு பக்கம் நடிகர்கள் வரிசையாக காத்திருக்கும் நிலையில் மறுபக்கம் அவருடன் பணியாற்றவும், அவரின் உதவி இயக்குநராக பணியாற்றவும் பலர் காத்திருக்கின்றனர். தொடர்ந்து சினிமாவில் உள்ள பலருக்கு நூலகமாக இருக்கிறது மணிரத்னத்தின் படங்கள்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இறுதியாக வெளியான தக் லைஃப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இணைந்து நடித்ததால் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மணிரத்னம் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
மணிரத்னத்தின் படத்தில் இணைந்த தமிழ் பிரபா:
பிரபலமான பத்திரிகை ஒன்றில் எழுத்தாளராக பணியாற்றி வந்த தமிழ் பிரபா தற்போது தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான சார்பாட்ட பரம்பரை படத்தில் இருந்து தொடர்ந்து ப்ளூ ஸ்டார், தங்கலான், சொர்க்க வாசல் மற்றும் காந்தா ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார்.
அதன்படி இவர் தொடர்ந்து திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் பணியாற்ற உள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடையே தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை இயக்கும் நடிகர் தனுஷ்? இது புது ட்விஸ்ட்டா இருக்கே
தமிழ் பிரபா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Invited by Mani Ratnam sir to his office to discuss a story and explore possibilities for screenplay and dialogue writing. Hearing him narrate the script was a surreal moment — one that fuels me for whatever comes next. 🙂 pic.twitter.com/Yv9P1pz2Mg
— தமிழ்ப்பிரபா (@Lovekeegam) November 17, 2025
Also Read… தோ கிலோமீட்டர்… தோ கிலோமீட்டர்… 8 ஆண்டுகளை நிறைவு செய்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்!