நிவின் பாலியின் பிரதிசாயா படத்திலிருந்து வெளியானது தலவா பாடல் வீடியோ

Thalava Lyrical Video Song | நடிகர் நிவின் பாலி நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி தற்போது பிரதிசாயா என்ற படம் நடிகர் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவின் பாலியின் பிரதிசாயா படத்திலிருந்து வெளியானது தலவா பாடல் வீடியோ

பிரதிசாயா

Published: 

24 Mar 2026 16:29 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நடிகர் நிவின் பாலியை பான் இந்திய அளவில் பிரபலமாக்கியது பிரேமம் படம் தான். இந்தப் படத்தினை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்த நிலையில் படம் வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி நிவின் பாலியை அதிக அளவில் பிரபலப்படுத்தியது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து தான் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மற்ற மொழி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்தடுத்துப் படங்களில் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி வருகின்றது. அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி கேர்ள். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் பிரதிச்சாயா.

பிரதிசாயா படத்திலிருந்து வெளியானது தலவா பாடல் வீடியோ:

இயக்குநர் உன்னிகிருஷ்ணன் பி எழுதி இயக்கி உள்ள இந்த பிரதிசாயா படம் வருகின்ற 26-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படத்தில் இருந்து தலவா என்ற பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Chiranjeevi: சூர்யாதான் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறார் – புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி!

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… Thaai Kizhavi: 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட மொத்த வசூல் இத்தனை கோடியா?

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்