உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி… 5 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜயின் மாஸ்டர் படம்

5 Years Of Master Movie: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாஸ்டர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததாக படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதி... 5 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜயின் மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

Published: 

13 Jan 2026 19:13 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாஸ்டர். நடிகர் தளபதி விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி இருந்த இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, மகேந்திரன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெர்மியா, அர்ஜுன் தாஸ், மாஸ்டர் அக்ஷய் குமார், சாந்தனு பாக்யரா, கௌரி ஜி. கிஷன், நாசர், அழகம் பெருமாள், சிபி புவனா சந்திரன், குளப்புள்ளி லீலா, ரம்யா சுப்ரமணியன், ராஜேஷ், மகாநதி சங்கர், பிரவின் ஆதித்யா, அருண் அலெக்சாண்டர், ராஜா ராணி பாண்டியன், சாய் தீனா, ரமேஷ் திலக், சேத்தன், மேத்யூ வர்கீஸ், அஜித் கோஷி, ராகுல் கண்ணன், சுனில் ரெட்டி, கல்யாணி நடராஜன், மோனா, விசாலினி, சுரேகா வாணி, சௌந்தர்யா பாலா நந்தகுமார், லிண்டு ரோனி, தீனா, லல்லு, உதயராஜ், பூவையார், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் குமார், நாகேந்திர பிரசாத், சங்கீதா, மாஸ்டர் சக்தி, மாஸ்டர் பவாஸ், பிரிஜிடா, ரவி வெங்கட்ராமன், நக்கலைட்ஸ் செல்லா, வசந்தி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் படம் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளை நிறைவு செய்தது விஜயின் மாஸ்டர் படம்:

கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் விஜய் எதிர்பாராத ஒரு சூழலில் சிறுவர் சீர்திறுத்தப் பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கு சிறுவர்களை விஜய் சேதுபதி தனது தவறான செயல்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை அறிந்த விஜய் அதனை எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sreeleela: அதை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது – எமோஷனலாக பேசிய ஸ்ரீலீலா!

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் 54-வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!