தலைவர் 173 படம் எந்த நிலைமையில் உள்ளது? வைரலாகும் தகவல்

Thalaivar 173 Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரைய்ரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 173. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.

தலைவர் 173 படம் எந்த நிலைமையில் உள்ளது? வைரலாகும் தகவல்

தலைவர் 173

Published: 

22 Apr 2026 15:30 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது பாகமும் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஒரு வருடமாக நடைப்பெற்று வந்த நிலையில் நேற்று படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் படக்குழுவினர் உடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த தீபாவளி பண்டிகைக்கு ஜெயிலர் 2 படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் தலைவர் 173. இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.

தலைவர் 173 படம் எந்த நிலைமையில் உள்ளது?

இந்தப் படத்தில் இயக்குநர் முன்னதாக மாற்றப்பட்ட நிலையில் அடுத்ததாக வந்த சிபி சக்ரவர்த்தியும் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தலைவர் 173 படத்தின் முன் தயாரிப்புப் பணிகளுக்கே மட்டும் ரூபாய் 30 லட்சம் செலவாகியுள்ளது. அலுவலக உட்புற மாற்றங்கள் மட்டுமல்லாமல், முன் தயாரிப்பு மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பைக்கர் படம் இதுவரை வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sai Abhyankkar: கருப்பு பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப ஆச்சயரமாக இருந்தது – சாய் அபயங்கர் பேச்சு!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..