AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

9000mAh பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் – சிறப்பம்சங்கள் என்ன?

Tech Trend Explained : 9000 mAh பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. இப்படி பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதால் என்ன நன்மை? இது யாருக்கு உகந்தது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

9000mAh பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள்  – சிறப்பம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 22 Apr 2026 17:20 PM IST

ஸ்போர்ட்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப அதி நவீன வசதிகளுடன் ஸ்மார்ட் போன்களும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது 9000mah அளவுள்ள பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. இந்த போனில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பதால் இது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. ஆனால் இந்த அளவுக்கு பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் உண்மையில் தேவையா என்ற கேள்வி எழுகிறது. இந்த கட்டுரையில் பெரிய பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களில் சாதக பாதக அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பெரிய பேட்டரி கொண்ட போன்களின் தேவை என்ன?

இன்றைய வாழ்க்கை முறையில், ஸ்மார்ட்போன் இல்லாமல் நாம் இயங்க முடியாத நிலை உள்ளது. அதன்படி வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங், வீடியோ கால், யுபிஐ பரிவர்த்தனைகள், சோஷியல் மீடியா ஆகிய காரணங்களால் நாம் நாள் முழுவதும் சிறுநொடி கூட விலகாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் சார்ஜ் வேகமாக குறைவதால் , அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக வெளியில் பயணிக்கும்போது சார்ஜ் செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

இதையும் படிக்க : உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

9000mAh பேட்டரியின் முக்கிய நன்மைகள்

இந்த நிலையில் 9000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அதன் படி ஒரே சார்ஜில் 2 முதல் 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். 12 மணி நேரத்திற்கு மேல் கேமிங் அல்லது வீடியோ பார்க்கலாம். இதனால் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் குறைகிறது. நீண்ட பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது மின்தடை போன்ற நேரங்களில் இது பெரிதும் உதவும். இதனால் பேட்டரி விரைவில் காலியாகும் என்ற கவலை இல்லை.

யாருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

நீண்ட நேரம் கேமிங் செய்வோர், டெலிவரி போன்று வெளியே அதிக நேரம் வேலை செய்பவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், 5ஜி போன்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இது பெரிதும் கைகொடுக்கும். குறிப்பாக முன்பு போல வெளியே பயணிக்கும்போது நம்முடன் பவர் பேங்க் எடுத்து செல்ல வேண்டும் என்ற தேவையை இவ்வகை போன்கள் வெகுவாக குறைக்கின்றன.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போனில் ஆதார் செயலி Pre Install.. முடிவில் இருந்து பின்வாங்கிய அரசு.. காரணம் என்ன?

அதே நேரம் குறைவான எடையுள்ள ஸ்லிம்மான போன்களை விரும்புபவர்கள், அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு இவ்வகை போன் அவசியமற்றது. 9000mAh போன்களில் பல நன்மைகள் இருந்தாலும், அது எல்லோருக்குமானது அல்ல. அதனால் சாதாரண பயன்பாடுகளுக்கு 5000mAh முதல் 7000mAh வரை உள்ள போன்களை அதிகமாக பயன்படுத்துவது நல்லது.

Follow Us