Tamannaah Bhatia: நம்பும் அளவிற்கு முட்டாள் இல்லை.. அது என்னை கோபப்படுத்தும் – தமன்னா ஓபன் டாக்!
Tamannaah About She Hates: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தமன்னா பாட்டியா. அந்த வகையில் தன்னை அதிகமாக கோபமாக்கும் விஷயம் என்ன என்பது குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
நடிகை தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் . தற்போது பிரம்மாண்ட படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவர் தமிழ் படங்களை விடவும், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக கடந்த 2024ம் ஆண்டில் வெளியான அரண்மனை 4 (Aranmanai 4) படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து பெரிதாக எந்த தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகாவில்லை. மேலும் இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இதுபற்றி எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தம்மனா, அவருக்கு அதிகம் வெறுப்பை தரும் விஷயம் குறித்து பானக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை முதலில் நிராகரித்த நடிகை.. அட இவரா?
தனக்கு பிடிக்காத விஷயம் குறித்து ஓபனாக பேசிய தமன்னா
அந்த நேர்காணலில் நடிகை தமன்னா பல்வேறு விஷங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ” என்னிடம் யாராவது முகத்திற்கு நேராக பொய்ச் சொல்லி, நான் அதை அந்த விஷயத்தை நம்பும் அளவிற்கு முட்டாள் என நினைப்பது எனக்கு மிகுந்த கோவத்தை கொடுக்கும். அதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது” என்று அந்த நேர்காணலில் நடிகை தமன்னா கூறியிருந்தார். இந்த தகவல் தற்போது ஆரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: ஷாலினிக்கு மிகவும் நன்றியுள்ளவன்.. அவர் இல்லாமல் இது நடந்திருக்காது – அஜித் குமார்!
தமன்னா பாட்டியா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
நடிகை தமன்னாவின் புதிய படங்கள் :
நடிகை தமன்னாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் ஓ ரோமியோ, ரேஞ்சர், வான் மற்றும் நடிகர் ரோஹித் ஷெட்டியுடன் ஒரு படம் என நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் டூ யூ வான்ட் பாட்னர் என்ற வெப் தொடரும் வெளியாகியிருக்கிறது. இது மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



