மேரா பாய் இது நம்ம டைம்… அதிரடியான காட்சிகளுடன் வெளியானது கருப்பு படத்தின் டீசர்!

Karuppu (Tamil) - Teaser | நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தில் இருந்து படக்குழு நேற்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட நிலையில் இன்று படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

மேரா பாய் இது நம்ம டைம்... அதிரடியான காட்சிகளுடன் வெளியானது கருப்பு  படத்தின் டீசர்!

கருப்பு

Published: 

23 Jul 2025 10:46 AM

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா (Actor Suriya) இன்று 23-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அடுத்ததாக கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கருப்பு படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று 22-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. கருப்பு உடையில் சுருட்டை பிடித்துக்கொண்டு மாசாக கிராமத்து லுக்கில் நடிகர் சூர்யா நடந்துவருவது போல அந்த போஸ்டர் இருந்தது.

அந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பாணியில் வெளியாகியுள்ள அந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சூர்யாவின் கருப்பு டீசர் சொல்லு விசயம்:

சூர்யாவின் முந்தையை படங்களின் காட்சிகள் இந்த கருப்பு படத்தில் ரீ கிரியேட் செய்யப்பட்டுள்ளது டீசரில் தெரியவந்துள்ளது. கிராமத்து இளைஞனாக முரட்டுத்தனமாக இருக்கும் சூர்யாவிற்கு இந்தப் படத்தில் சரவணன் என்று அவரது நிஜ பெயரே வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் படத்தில் வழக்கறிஞராக இருப்பதும் டீசரைப் பார்க்கும் போது தெறிகிறது. வழக்கமான ஆர்.ஜே.பாலாஜி படங்களில் காமெடி காட்சிகள் அதிகமாக நிறைந்து இருக்கும். ஆனால் இதில் முற்றிலும் மாறாக ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டுள்ளது. டீசரைப் பார்க்கும் போதே இது ஆர்.ஜே.பாலாஜியின் படமா என்று கேள்வி எழுவது போலவே உள்ளது.

ஆனால் சூர்யாவின் முந்தைய படங்களை வைத்து பார்க்கும் போது அவர் கிராமத்து கதைகளில் நடித்த படங்கள் பெரும்பாளும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read… நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

கருப்பு டீசர் தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் மயக்கம் என்ன படத்தின் தெலுங்கு வெர்ஷன்!