Karuppu: சூர்யாவின் கருப்பு படத்தின் 3வது சிங்கிள்.. ‘ராத்து ராசன்’ பாடல் புரோமோ வீடியோ வெளியீடு!

Raathu Raasan Song Promo: சூர்யாவின் நடிப்பில் 45வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் கருப்பு. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 3வது பாடல் நாளை 2026 ஏப்ரல் 14ம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளது. அந்த வகையில் ராத்து ராசன் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Karuppu: சூர்யாவின் கருப்பு படத்தின் 3வது சிங்கிள்.. ராத்து ராசன் பாடல் புரோமோ வீடியோ வெளியீடு!

ராத்து ராசன் பாடல் புரோமோ

Updated On: 

13 Apr 2026 20:14 PM

 IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) நாயகனாக நடித்திருக்கும் நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஆரம்பமானது. இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்துள்ளார். இந்த ஜோடி இறுதியாக ஆறு (Aaru) என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது முழுக்க கிராமத்து ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையமைப்பில் ஏற்கனவே காட் மோட் (God Mode) மற்றும் நாங்க நாலு பேரு (Naanga naalu peru) என 2 பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், 3வது பாடல் வரும் 2026 ஏப்ரல் 14ம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது கருப்பு படத்தின் 3வது சிங்கிள் “ராத்து ராசன்” (Raathu Raasan) பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் கருப்பு பட தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. அட இத்தனை கோடிகளுக்கா?

கருப்பு திரைப்படத்தின் ராத்து ராசன் பாடல் புரோமோ வீடியோ பதிவு:

நடிகர் சூர்யாவின் இந்த கருப்பு படமானது கிட்டத்தட்ட ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர்கள் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஷிவதா, ஸ்வாசிகா, ஆர்.ஜே.பாலாஜி, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படமானது முழுவதும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சூர்யா, திரிஷா, மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோ வழக்கறிஞராக நடித்துள்ளனர். இப்படம் நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடக்கும் யூத்தம் என்பதுபோன்ற கதையில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை கசியவிட்டது படத்தின் எடிட்டரா? படத்தொகுப்பாளர் சங்கம் விளக்கம்!

அந்த வகையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் ரூ 37 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026 மே 14ம் தேதியில் இப்படமானது வெளியாகவுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?