My Lord Movie: மை லார்ட் படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா – வைரலாகும் வீடியோ!

Suriya Meet My Lord Movie Crew: தமிழில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மை லார்ட். இந்நிலையில் இப்படக்குழுவை நடிகர் சூர்யா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

My Lord Movie: மை லார்ட் படக்குழுவை நேரில் சந்தித்த சூர்யா - வைரலாகும் வீடியோ!

சூர்யா மை லார்ட் படக்குழுவை சந்தித்தார்

Updated On: 

14 Feb 2026 15:59 PM

 IST

நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பில் ஆண்டுதோறும் நிச்சயம் ஒரு ஹிட் படத்தை கொடுத்துவருகிறார். அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டு டூரிட்ஸ் பேமிலி (Tourist Family) என்ற ஹிட் படத்தை மக்களுக்கு கொடுத்திருந்தார். இப்படமானது இலங்கை அகதிகள் குறித்த கதையில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் நடித்துவந்த படம்தான் மை லார்ட் (My Lord). இதை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்க, சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே ஆச்சார் (Chaitra J Achar) இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது 2026 பிப்ரவரி 13ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது கிட்னி கடத்தல் மற்றும் ஏழ்மையான குடும்பத்தை டார்கெட் செய்யும் தரகர்கள் என வித்தியாசமான ஸ்டோரியில் வெளியாகியிருந்தது.

இப்படம் மக்கள் மத்தியில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது. தற்போது இப்படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சூர்யா (Suriya) வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் 26 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்

மை லார்ட் படக்குழுவை சூர்யா நேரில் அழைத்து பாராட்டியது தொடர்பான பதிவு:

சசிகுமாரின் மை லார்ட் திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, ஒலிம்பியா பிலிம்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் சசிகுமார் மற்றும் சைத்ரா ஜே அச்சாருடன் நடிகர்கள் ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெய பிரபாகரன், கோபி நாயர் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த் படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாகவே வந்துள்ளது.

இதையும் படிங்க: சசிகுமாரை காப்பாற்றுவார்கள்… என்னைக் காப்பாற்ற வரமாட்டார்கள் – வெளிப்படையாக பேசிய எச்.வினோத்!

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சூர்யாவின் 2டி எண்டெர்டைமென்ட் நிறுவனமானது வாங்கியிருந்த நிலையில், தமிழக ரிலீஸில் இதுவரை ஓரளவு சிறப்பான வரவேற்பையே பெற்றுவருகிறதாம். இப்படத்திற்கு முன் சசிகுமாரின் நாடியுபில் ஃப்ரீடம் என்ற படமானது வெளியாகவிருந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் நிதி பிரச்சனையின் காரணமாக இன்னும் இப்படம் ரிலீஸ் செய்யப்படகிவில்லை. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டிற்குள்ளாவது வெளியாகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

அமெரிக்காவில் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு மிரட்டல்..
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் காணப்படும் கண்ணாடி பாட்டில்கள் - அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்