சூர்யா47 படத்துக்காக புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா!

Suriyas New Production Company: தென்னிந்திய சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் கருப்பு, மற்றும் சூர்யா46 போன்ற படங்கள் தயாராகிவரும் நிலையில், மேலும் சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகும் புது படம் குறித்து பார்க்கலாம்.

சூர்யா47 படத்துக்காக புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா!

சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனம்

Published: 

07 Dec 2025 20:26 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படம் கடந்த மே 1ம் தேதியில் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்த கையேடு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி (RJ. Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu) மற்றும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 (Suriya) போன்ற படங்களிலும் ஒப்பந்தமானார். இதில் கருப்பு மற்றும் சூர்யா46 படத்தின் ஷூடிங் பணிகளை சூர்யா முழுமையாக நிறைவு செய்துள்ளார். நடிகர் சூர்யா ஏற்கனவே 2டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடத்திவருகிறார்.

தற்போது 2வது புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு “ழகரம் ஸ்டூடியோஸ்” (Zhagaram Studios) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இன்று 2025 டிசம்பர் 7ம் தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கலீஃபா படத்தில் மோகன்லாலின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்

சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தொடர்பான வைரலாகும் பதிவு :

சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் படம் :

நடிகர் சூர்யாவின் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் முதல் படமாக சூர்யா47 அமைந்துள்ளது. இப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை பற்றிய தகவல்கள் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், இன்று இப்பட ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: தளபதி ரசிகர்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. விஜய்யின் ஜன நாயகன் பட நிகழ்ச்சியில் தனுஷ்!

இந்த படத்தின் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நஸீம் நடிக்கவுள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு பின் இப்படம் மூலம் கதாநாயகியாக தமிழில் மீண்டும் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லென் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். மேலும் இந்த படத்தில் மேலும் பல மலையாள நடிகர்கள் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை