Youth Movie: கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சூர்யா மற்றும் கார்த்தி!

Suriya And Karthi Praise Youth Movie: தென்னிந்திய சினிமாவில் சினிமாவிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி சிறந்த அண்ணன் மற்றும் தம்பியாக இருந்துவருபவர்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இது குறித்து யூத் படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

Youth Movie: கென் கருணாஸின் யூத் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்திய சூர்யா மற்றும் கார்த்தி!

சூர்யா, கார்த்தி மற்றும் யூத் படக்குழு

Updated On: 

24 Mar 2026 21:54 PM

 IST

தமிழில் இளம் நடிகராகவும், இயக்குநராகவும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளவர் கென் கருணாஸ் (Ken Karunaas). இவர் தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாஸின் (Karunaas) மகன் ஆவார். இவர் ஏற்கனவே சினிமாவில் சில முக்கிய வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவரே இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் யூத் (Youth). இந்த படத்தில் கென் கருணாஸ், நடிகர், இயக்குநர் பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிட்டத்தட்ட நடிகர் தனுஷை (Dhanush) போலவே தனது முதளில் படத்தில் பணியாற்றியுள்ளார். சொல்லப்போனால் நடிகர் கென் கருணாஸ், தனுஷின் உதவி இயக்குநராக வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவர் இயக்கிய யூத் திரைப்படமானது தற்போது தமி சினிமாவில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுவரை கிட்டத்தட்ட ரூ 29 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இன்னும் வார இறுதியில் இன்னும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா (Suriya) மற்றும் கார்த்தி (Karthi) இருவருமே கென் கருணாஸின் யூத் படக்குழு மற்றும் நடிகர்களை நேரில் அழைத்தது பாராட்டியுள்ளனர். இது தொடர்பான பதிவை தற்போது யூத் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கர படத்தில் கந்தசாமியாககே.எஸ்.ரவிக்குமார்- படக்குழு வெளியிட்ட அறிமுக போஸ்டர்!

சூர்யா மற்றும் கார்த்தி நேரில் அழைத்து பாராட்டியது குறித்து யூத் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கென் கருணாஸின் யூத் திரைப்படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. காமெடி, எமோஷனல், காதல் மற்றும் பள்ளிப்பருவ நினைவு என முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படமானது ஒட்டுமொத்தமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் திரைப்படமாகவே இருந்தது என்று கூறலாம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில், ஒவ்வுறு பாடல்களும் அருமையாகவே இருந்தது.

இதையும் படிங்க: பிக்பாஸை தொடர்ந்து வெப் சீரிஸில் களமிறங்கிய விஜே.பார்வதி.. யாருடன் தெரியுமா?

அதிலும் முதல் பாடலாக வெளியான முட்டை கலக்கி உலகளவில் ட்ரெண்டிங்கில் 4வது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் யூத் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து மற்றும் படத்தை பாராட்டியிருந்தார். அதனை தொடர்ந்து, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே யூத் பட நடிகர்கள் கென் கருணாஸ், அனிஷிமா அனில்குமார், மீனட்சி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்