மிராய் படத்தின் ட்ரைலரைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!
Mirai Movie: தெலுங்கு சினிமாவில் ஃபேண்டசி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது மிராய். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மிராய் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் உடன் மஞ்சு மனோஜ்
தெலுங்கு சினிமாவில் தற்போது நடிகர் தேஜா சஜ்ஜா (Teja Sajja) நாயகனாக நடித்துள்ள படம் மிராய். ஃபேண்டசி ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா உடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜகபதி பாபு, ஜெயராம், ராவ் ரமேஷ், தஞ்சா கெல்லர், முகேஷ் ரிஷி, பவன் சோப்ரா, ராஜேந்திரநாத் ஜூட்ஷி, ரவி மரியா, ஸ்ரீராம் ரெட்டி பொலாசனே, கௌஷிக் மஹதா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கௌரா ஹரி இசையமைத்துள்ள நிலையில் படத்தினை பீப்பில் மீடியா ஃபேக்ட்ரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருதி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்பட்டது. மேலும் படம் வருகின்ற 12-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் தொடந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மிராய் படத்தின் ட்ரெய்லரைப் பாராட்டிய ரஜினிகாந்த்:
அதன்படி மிராய் படத்தில் நடித்த நடிகர் மஞ்சு மனோஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். அப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள மிராய் படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்திற்கு போட்டு காட்டியுள்ளார். அதனைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் மஞ்சு மனோஜ் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வெற்றியடைய வேண்டும் என்று தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்தப் பதிவு வைரலாகி வருகின்றது.
Also Read… ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள் – ராஜிவ் மேனன் சொன்ன விசயம்!
மஞ்சு மனோஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#மிராய் டிரையிலரை பார்த்து எங்களை பாராட்டிய சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்பு சகோதரர் @Siva_Kartikeyan னின் #மதராசி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக மக்களுக்கும், ஊடக நன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.#Mirai… pic.twitter.com/H3kK2M9nQH
— Manoj Manchu🙏🏻❤️ (@HeroManoj1) September 2, 2025
Also Read… பிரித்விராஜ் நடிப்பில் கோல்ட் கேஸ் என்ற க்ரைம் த்ரில்லர் ஹாரர் படத்தை பார்த்து இருக்கீங்களா?