நடிகர் கவினின் கிஸ் படத்தின் ரிலீஸ் எப்போது… வைரலாகும் தகவல்!
Kavin Kiss Movie: சின்னத்திரையில் நாயகனாகவும் தொகுப்பாளராகவும் இருந்த கவின் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள கிஸ் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

கிஸ் படம்
நடிகர் கவின் (Actor Kavin) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கிஸ். இந்தப் படத்தை இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் (Director Sathish Krishnan) இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருகும் இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். ரொமாண்டிக் காமெடியை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை பிரபல தயரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி உடன் இணைந்து நடிகர்கள் பிரபு, VTV கணேஷ், RJ விஜய், ராவ் ரமேஷ், தேவயானி, சக்தி ராஜ், மேத்யூ வர்கீஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. இந்த டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கிஸ் படத்தின் ரிலீஸ் எப்போது?
படத்தின் டீசர் தொடங்கும் போதே லிஃப்டில் காதலர்கள் லிப் லாக் செய்துக்கொள்ளும் காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்களின் காதலும் 90ஸ் கிட்ஸ்களின் காதலும் எப்படி என்பதை சுற்றியே உள்ளது என்பது டீசரைப் பார்க்கும் போதே தெரிகிறது.
இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிஸ் படம் குறித்து நடிகர் கவின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you boys ♥️@JenMartinmusic @VishnuEdavan1 #Jillelama@adithyarkM @thisispriyamali @romeopicturesoffl @dancersatz @thepreethiasrani @harish_dop @sureshchandraaoffl sir @peterhein master @rcpranav @iamgunashekar @sonymusic_southhttps://t.co/W5xWraYyur pic.twitter.com/IvTFmtQpEE
— Kavin (@Kavin_m_0431) June 10, 2025