காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்

Actor Sasikumar: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக சசிகுமார் நடிக்க உள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்

சசிகுமார்

Published: 

27 Oct 2025 12:56 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar). தொடர்ந்து இயக்குநராக பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சசிகுமார் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். அதன்படி நடிகர் சசிகுமார் தேர்வு செய்யும் கதைகள் மக்களை எளிதாக கவரும் விதமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சசிகுமாரின் நடிப்பில் இந்த ஆண்டின் தொடகத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சிறிய பட்ஜெட்டில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையே விமர்சன ரீதியகா நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டினர். இந்தப் படம் சினிமாவில் சசிகுமாரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃப்ரீடம். மிகவும் சீரியசான கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது.

செல்வராகானின் உதவி இயக்குநருடன் கூட்டணி அமைத்த சசிகுமார்:

இந்த நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிகராக கமிட்டாகி வருகிறார் சசிகுமார். அதன்படி பிரபல இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநர் இயக்க உள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்திற்கு அதிகாரி என்று பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பார்வையாளர்களுக்கு எப்போதும் ட்ரெய்லரில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் – விஷ்ணு விஷால்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!