கூலி படத்தில் அந்த 10 நிமிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது – சௌந்தர்யா ரஜினிகாந்த்

Soundarya Rajinikanth About Coolie Movie: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூலி படம் குறித்து பேசியுள்ளார்.

கூலி படத்தில் அந்த 10 நிமிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது - சௌந்தர்யா ரஜினிகாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்த்

Published: 

04 Feb 2026 20:56 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 75 வயது ஆகியும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமா துறையில் உள்ளனர். இதில் மூத்த மகள் இயக்குநராகவும் இளைய மகள் இயகுநர், தயாரிப்பாளர் மற்றும் கிராஃபிக்ஸ் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் வித் லவ் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதனை அறிமுக இயக்குநர் மதன் என்பவர் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 06-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கூலி படத்தில் அந்த 10 நிமிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது:

சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, டீ-ஏஜிங் செய்யப்பட்ட கடைசி 10 நிமிடங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், தலைவர் ரஜினிகாந்தின் ரசிகையாக, அவரை இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்பினேன். படம் எனக்குப் பிடித்திருந்தது, ஆனால் இது அப்பாவின் சிறந்த படங்களின் பட்டியலில் இல்லை. என் கருத்துப்படி, இந்த நாட்களில் மக்கள் அதிகப்படியான வன்முறையை விரும்புவதில்லை. கூலி படம் பற்றி நான் மேலும் விரிவாகப் பேச விரும்பவில்லை, ஏனென்றால் பல நல்ல படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Also Read… போக்கிரி படம் என்னை ஒரு நட்சத்திரமாக மாற்றியது – நடிகர் மகேஷ் பாபு ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் சௌந்தர்யா பேச்சு:

Also Read… தனுஷ் 55 படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை