Soori: திண்ணைல கிடந்தவனுக்கு… கிண்டல் செய்த ரசிகர் – பதிலடி கொடுத்த சூரி

Soori X Post: சூரியின் முன்னணி நடிப்பில், தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளியை சூரி கொண்டாடிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு ஒருவர் கிண்டல் செய்த நிலையில், அதற்கு தக்க பதிலை கொடுத்துள்ளார்.

Soori: திண்ணைல கிடந்தவனுக்கு... கிண்டல் செய்த ரசிகர் - பதிலடி கொடுத்த சூரி

சூரி

Published: 

23 Oct 2025 20:25 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் சூரி (Soori) தற்போது நாயகனாக நடிக்க, தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar ) வரை பல உச்ச நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியிருகிறார். அந்த வகையில் தற்போது இவர் திரைப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்துவருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் விடுதலை பார்ட் 1 (Viduthalai Part 1) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது ஹீரோவாக நடித்துவருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் மாமன் (Maaman). இந்த படமானது இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து, சுமார் ரூ70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ஹிட்டடித்திருந்தது.

அதை அடுத்ததாக மேலும் புதிய படங்களிலும் சூரி நடித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கீழ் எக்ஸ் பயனர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் சூரி பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மாரி செல்வராஜின் பைசன் படத்தை வாழ்த்திய அண்ணாமலை!

 பயனர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்கு சூரியின் பதிலடி :

அந்த நபருக்கு பதிலடி தரும் விதத்தில் நடிகர் சூரி , “திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்கள் இரவில் ரோட்டில் இருந்தவன் நான், அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையையும் மதிப்பையும் கற்றுத் தந்தது என்றும் நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்”. அந்த நபருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் சூரியின் புதிய படம் :

நடிகர் சூரி, மாமன் திரைப்படத்தை தொடர்ந்து கடல் சார்ந்த கதைக்களத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கிவருகிறார்.

இதையும் படிங்க: டியூட் பட வசூல் சாதனை… ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன்!

இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகிவரும் நிலையில், தமிழில் நடிகர் சுஹாஸ் வில்லனாகவும், தெலுங்கில் சூரி வில்லனாகவும் நடித்துவருகின்றனர். இப்படத்தில் முன்னணி நாயகியாக மஹிமா நம்பியார் நடித்துவருகிறார். மேலும் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.