தாய் கிழவி பட இயக்குநரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. சைலண்டாக முடிந்த புரோமோ ஷூட்? – வைரலாகும் தகவல்!

Sivakarthikeyans Next Film: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் அது குறித்த ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தாய் கிழவி பட இயக்குநரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. சைலண்டாக முடிந்த புரோமோ ஷூட்? - வைரலாகும் தகவல்!

சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன்

Updated On: 

03 Feb 2026 16:23 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) சினிமாவில் ஆரம்பகாலக்கட்டத்தில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். தற்போது இவர் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை மொத்தமாக 24 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தை பிரபல பெண் இயக்குநரான சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன் லீட் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

அந்த விதத்தில் இப்படத்தை அடுத்ததாக வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தற்போது தாய் கிழவி (Thaai Kizhavi) திரைப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில், சிவகார்த்திகேயன் புது படத்தில் நடிக்கிறாராம். இப்படத்தின் புரோமோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை… வைரலாகும் தகவல்

சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் தாய் கிழவி பட இயக்குநர்:

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் வெளியாகி காத்திருக்கும் படம் தாய் கிழவி. இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் நிலையில், அருமையாக வந்துள்ளதாம். அந்த விதத்தில் தனது அடுத்த படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேஷனுடன் இணைவதாக சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில், காமெடி என்டர்டைமென்ட் படமாக தயாராகவுள்ளதாக இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரன்வீர் சிங் – சாரா அர்ஜுனின் ‘துரந்தர் 2’ டீசர் வெளியானது.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

இந்நிலையில் நேற்று 2026 பிப்ரவரி 2ம் தேதியோடு சிவகார்த்திகேயன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 14 ஆண்டுகள் கடந்துள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் நடந்ததாகவும், இதன் புரோமோ ஷூட் நடந்ததாகவும் இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

தாய்க் கிழவி படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், புது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் புது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..