இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Actor Sivakarthikeyan: சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தி வழங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள அவர் ஒரே ஒருவரை மட்டும் ஃபலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கத்து.

சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதராஸி மற்றும் பாராசக்தியில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன்:
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி வைத்தார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான அதற்கு மதராஸி என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து உள்ளது குறிபிடத்தக்கது. மேலும் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் விறுவிறுப்பாக அந்தப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா முரளி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இன்ஸ்டாவில் சிவகார்த்திகேயன் ஃபாலோ பண்ணும் அந்த ஒருவர் யார்?
நடிகர்கள் தங்களுக்கென சமூக வலைதளங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் நடிகைகள் யார் யாரை ஃபாலோ செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உள்ளது. அப்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களைக் கொண்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி ரவியை மட்டுமே இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு:
Also Read… தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!