‘பிக் ஃபேன் ப்ரோ’.. க்யூட் ரசிகர்களை சந்தித்த சிலம்பரசன்- வைரலாகும் வீடியோ!
Simbu Viral Video: தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவத்திலிருந்து நடித்துவருபவர் சிலம்பரசன். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் காரில் பயணம் செய்த சிலம்பரசன் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் இருந்தபடியே சந்தித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சிலம்பரசன்
சிலம்பரசன் (Silambarasan) தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 48 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தில் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து நடித்திருந்தார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தனது அடுத்த 3 படங்களையும் சிலம்பரசன் அறிவித்திருந்தார். அதில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) கூட்டணி படமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின் எதிர்பாராத வகையில் வெற்றிமாறனின் (Vetrimaaran) அரசன் (Arasan) படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் காரில் பயணம் செய்த சிலம்பரசன், செல்லும் வழியில் தனது குட்டி ரசிகர்களை சந்தித்துள்ளார். காரில் இருந்தபடியே, அருகிலிருந்த பள்ளி வாகனத்தில் இருந்த சிறுவர்களுக்கு கையசைத்தபடியான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் ஒரு சிறுவன், “பிக் ஃபேன் ப்ரோ” என கூச்சலிட்ட நிலையில், சிலம்பரசன் சிரித்திருந்தார். சிலம்பரசனுக்கு இவ்வளவு க்யூட் ரசிகர்கள் இருக்கார்களா? என மக்கள் தங்களின் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் – உருவகேலி குறித்து மனம்திறந்த கயாடு லோஹர்!
ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் சிலம்பரசனின் வீடியோ
#SilambarasanTR recent ♥️
While he was traveling, school kids noticed him & pouring in their love. STR in return responds so grounded 😍🫶pic.twitter.com/yvnbX2RmgG
— AmuthaBharathi (@CinemaWithAB) November 16, 2025
சிலம்பரசனின் அரசன் படத்தின் ஷூட்டிங் எப்போது ?
சினிமாவில் எதிர்பாராத கூட்டணியாக அமைந்திருந்ததுதான் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி. இப்படத்திற்கு அரசன் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். இந்த் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவருகிறார். இப்படமானது தனுஷின் வட சென்னை படத்தின் டைம் லைன் கதை அமைந்திருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ருத்ராவாக மகேஷ்பாபு.. ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டீசர்!
லோகேஷ் கனகராஜின் எல்சியூ போல வெற்றிமாறனுக்கு வடசென்னை படத்தின் தொகுப்பை உருவாக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில், வரும் 2025 நவம்பர் 24 ஆம் தேதியில் தொடங்கும் என வெற்றிமாறன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.