Silambarasan: அரசன் படத்திற்கு தயாரான சிலம்பரசன்.. ரசிகர்களிடையே வைரலாகும் ரீசென்ட் கிளிக்ஸ்!
Silambarasan Latest Look: கோலிவுட் சினிமாவில் தனது சிறுவயது முதல் மக்களின் மனதில் இடம்பிடித்துவருபவர்தான் சிலம்பரசன். இவரின் நடிப்பில் அரசன் திரைப்படமானது உருவாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் சிலம்பரசன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசனுடன் (Kamal Haasan) சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 ஜூன் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியில் முடிந்தது. இந்த படத்திற்கு பின் சிலம்பரசன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR49 படத்தில் நடிக்கவிருந்தார். இந்த படத்திற்காக தனது லுக்கை மாற்றியிருந்த நிலையில், கடைசியில் சில பிரச்சனைகளின் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்திலும் இவர் ஒப்பந்தமான படம்தான் அரசன் (Arasan). இந்த படமானது வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிமுக வீடியோ திரையரங்கு மற்றும் இணையத்தில் வெளியாகியிருந்தது.
இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் வெளிநாடுகளில் சுற்றிவருகிறார். இந்நிலையில் அரசன் பட லுக்கில், சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. வெள்ளை சட்டையில், கண்ணில் கூலிங் கிளாஸுடன் இருக்கும் சிலம்பரசனின் இந்த லுக் இணையத்தில் பரவிவருகிறது.




இதையும் படிங்க: பேமிலி மேன் சீரிஸ் இயக்குநரை காதலிப்பதை உறுதிப்படுத்திய சமந்தா? வைரலாகும் பதிவு!
இணையத்தில் வைரலாகும் சிலம்பரசனின் ரீசென்ட் போட்டோஷூட் :
View this post on Instagram
அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் எப்போது :
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணி, இந்த அரசன் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை வீ-க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். இவர் இதுவரை வெற்றிமாறன் படங்களுக்கு சரி, சிலம்பரசனின் படங்களுக்கும் சரி இசையமைத்ததே இல்லை. இந்த அரசன் திரைப்படத்தின் மூலமாகத்தான் இந்த மூவரின் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்
இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியில் தொடங்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இப்படம் தனுஷின் வட சென்னை திரைப்படத்தின் ஒரு பாகமாக உருவாகிவரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தின் ஷூடிங் கிட்டத்தட்ட 4 முதல் 5 மாதங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது 2026ம் ஆண்டு தீபாவளி அல்லது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.