சிலம்பரசன் பிறந்த நாளில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Silambarasan and Ashwath Marimuthu Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் சிம்புவை வைத்து அடுத்ததாக படம் இயக்க உள்ள அஸ்வத் மாரிமுத்து புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

சிலம்பரசன் பிறந்த நாளில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சிம்பு மற்றும் அஸ்வத்

Published: 

03 Feb 2026 16:58 PM

 IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது தந்தை டி ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் செய்யாத வேலையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இயக்குநர், நாயகன், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல பணிகளை செய்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சிலம்பரசனை கைக் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வைத்துவிட்டார். அப்படி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி மக்களின் மனதில் இடம் பிடித்த சிலம்பரசன் தற்போது நாயகனாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றார். சிலம்பரசன் தனது சுட்டிக் குரலில் ஐயம்ம லிட்டில் ஸ்டார்… ஆவேனே சூப்பர் ஸ்டார் என்று பாடியதற்கு ஏற்ப தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட் ஒன்றை தற்போது சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிம்புவின் அடுத்தப் படத்தில் டைட்டில் ஐ என்ற எழுத்தில் தொடங்கும்:

அதன்படி அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் STR. இந்த வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது சார்/ அரசன் படத்திற்குப் பிறகு நமது படத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன், அவரது அனைத்து ரசிகர்களுக்கும் ‘கொஞ்சம் பொருத்துகோங்க’. ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு பொழுதுபோக்கு படம் தயாராகிறது! தலைப்பு ‘ஐ’ என்று தொடங்கும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இதுட் தற்போது சிம்புவின் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Manmadhan: ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ்.. சிலம்பரசன் பர்த்டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்!

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..