அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் – வைரலாகும் வீடியோ

Arasan Movie Shooting Spot Video : நடிகர் சிலமபரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது இணையத்தி கசிந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் வெற்றிமாறன் - வைரலாகும் வீடியோ

அரசன்

Published: 

17 Dec 2025 13:56 PM

 IST

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் அரசன். இதற்கு முன்னதாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாத காரணத்தால் அடுத்து சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். இவர் முன்னதாக எழுதி இயக்கிய விடுதலை பாகம் 2 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்த அரசன் படமும் வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது என்று படத்தின் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே பலப் பேட்டிகளில் வெற்றிமாறன் தெரிவித்து இருந்தார்.

இந்தப் படம் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை காலத்தில் நடப்பது போன்ற படம் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அது ஒரு பார்லல் கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்த ஷூட்டிங்கிள் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அரசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் வெற்றிமாறன்:

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சிம்புவிடம் படப்பிடிப்பு தளத்தில் சீனை விவரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… 2026-ம் ஆண்டு வெளியாகும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம் – அர்ச்சனா கல்பாத்தி

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் FDFS எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

ஜனவரி முதல் மக்களுக்கு காத்திருக்கும் ஷாக்.. அதிரடியாக உயரப்போகும் டிவி விலை..
அஷ்வின் கணிப்பில் 2026 ஐபிஎல் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய அறியப்படாத வீரர்கள்
நீங்க ரெட் கலர் லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்களா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
சென்னை – நரசாபூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.. நேரம், கட்டணம், வழித்தட விவரம்