Siddharth: நெட்பிளிக்ஸ் வெப் தொடர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சித்தார்த்!

Siddharth Hollywood Debut: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகர்கள் ஒருவராக இருப்பவர் சித்தார்த். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக 3BHK என்ற படமானது வெளியானது. இந்நிலையில், இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், சித்தார்த் அதை உறுதி படுத்தியுள்ளார்.

Siddharth: நெட்பிளிக்ஸ் வெப் தொடர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சித்தார்த்!

சித்தார்த்

Published: 

21 Sep 2025 07:30 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோவாக இருப்பவர் சித்தார்த் (Siddharth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் 40வது படமாக இறுதியாக வெளியானது 3BHK. இந்த படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக மேலும் புதிய படங்களில் நடிகர் சித்தார்த் ஒப்பந்தமாகி வருகிறார் . இவரின் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரையும் ஈர்த்த திரைப்படம்தான் சித்தா (Chiththa). இந்த படத்தில் இவரின் நடிப்பிற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு அவரின் நடிப்பு இப்படத்தில் அருமையாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இந்திய படங்களை தொடர்ந்து, நடிகர் சித்தார்த் ஹாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளாராம். “அன்அக்கஸ்டம்ட் எர்த்” (Unaccustomed Earth) என்ற வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் சித்தார்த்தும் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க : அருண் விஜயின் ரெட்ட தல – முதல் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான ப்ரோமோ!

ஹாலிவுட் வெப் தொடர் குறித்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவு :

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சித்தார்த் :

நடிகர் சித்தார்த் படங்களை தாண்டி ஹாலிவுட் வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார். இந்த தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாம். இந்த தொடரில் நடிகர் சித்தார்த் அமித் முகர்ஜி என்ற பெங்காலி- அமெரிக்கன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகை ப்ரீடா பின்டோவும் நடிக்கவுள்ளாராம். இந்த தொடரானது முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்திக்கும்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்படும் காதல் குறித்த கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம்.

இதையும் படிங்க : பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு… ரீ ரிலீஸாகும் அஜித்தின் அட்டகாசம் படம்

இந்த வெப் தொடருக்கு அன்அக்கஸ்டம்ட் எர்த் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரானது ஜும்பா லகிரி என்ற நாவலை தழுவிய கதைக்கத்துடன் உருவாக்கவுள்ளது. இந்த வெப் தொடரின் ஷூட்டிங் லண்டனில் துவங்கியுள்ளதாம். இந்நிலையில், தற்போது நடிகர் சித்தார்த்துக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. சித்தார்த் ஹாலிவுட் சினிமாவில் களமிறங்கும் நிலைில் அது குறித்த கருத்துக்களை மக்கள் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.