AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Siddharth : 3BHK படம் பிடித்திருந்தால் பாருங்கள்… அந்த காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள் – சித்தார்த் ஓபன் டாக்!

Siddharth Talk About Why We Should Watch Movies :கோலிவுட் சினிமாவில் பல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி, சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சித்தார்த். இவரின் நடிப்பில் 3BHK என்ற படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் எதற்காகப் படங்களைப் பார்க்கவேண்டும் என்பதைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

Siddharth : 3BHK படம் பிடித்திருந்தால் பாருங்கள்… அந்த காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள் – சித்தார்த் ஓபன் டாக்!
3BHK திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jun 2025 19:27 PM IST

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் 3BHK. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் (Siddharth) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், இணைந்து நடிகர்கள் சரத்குமார் (Sarathkumar) , தேவயானி (Devayani) மற்றும் மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களின் காமினேஷனில் சூர்ய வம்சம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கடந்த 2017ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் (8 Thottakkal) என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படமானது மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.

இந்த 3BHK படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட வேலையிலிருந்து வருகிறது. வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர் திரைப்படங்களை எதற்காகப் பார்க்கவேண்டும் என்பது பற்றியும், தான் சொன்னதாகப் படங்களைச் சென்று பார்க்கவேண்டாம் என்றும் பேசியுள்ளார். இதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகர் சித்தார்த்தின் 3BHK படத்தின் பதிவு :

நடிகர் சித்தார்த் திரைப்படங்களைப் பற்றி பேச்சு :

3BHK படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவர், “ரசிகர்கள் எதற்கு ஒரு திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற கேள்விதான் இங்கு அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. ஒருவரிடம் இந்த படம் உனக்குப் பிடிக்கும் என்று கூறி அவர் என் சட்டையைப் பிடிப்பார், மற்றொருவர் இந்த படம் நன்றாக இருக்காது என்று சொன்னாயே இந்த படம் பார்த்தால்தான் எனது குழந்தையே உறங்குகிறது என்றும் நம்மிடம் கூறுவார்கள். ஆதலால் நீங்கள் எதற்காக ஒரு படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்காக மட்டும் படங்களைச் சென்று பாருங்கள், திரைப்படத்தின் போஸ்டர், மியூசிக், ட்ரெய்லர் போன்றவற்றைப் பார்த்துவிட்டு படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தால் மட்டும் படங்களைப் பாருங்கள்.

நான் சொன்னேன் என்ற காரணத்திற்காகப் படங்களை வந்து பார்க்கவேண்டாம், இது எனது மிகப் பெரிய பொறுப்பு. நான் ஒருவருக்கு இந்த படத்தை பாருங்கள் என்று முடிவைப் பண்ணலாம், ஆனால் 4 கோடி பேருக்கு நான் எவ்வாறு கூறுவது. மேலும் நான் நடித்த 3BHK படம் பிடித்திருந்தால் பாருங்கள், அதையும் நான் கட்டாயப்படுத்தவில்லை என நடிகர் சித்தார்த் ஓபனாக பேசியுள்ளார்.

Follow Us