திருமணம் குறித்து யோசிச்சாலே பயமா இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan: நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் தற்போது ஆவளுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஸ்ருதி ஹாசன்
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன நடிகர் ஸ்ருதி ஹாசன் (Shruthi Haasan)தற்போது முன்னணி நாயகிகளின் பட்டியளில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி, இசையமைப்பாளர் மற்றும் நடிகை என சினிமாவில் கலக்கி வரும் இவர் முதலில் சினிமாவில் ரசிகர்களிடையே பாடகியாகவே அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நடிகையாக அறிமுகம் ஆனார் ஸ்ருதி ஹாசன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தனது தந்தை நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தில் இவர் பாடிய விண்வெளி நாயகா பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ருதி ஹாசன் அவரது தந்தையை போல சொந்த வாழ்க்கையில் எந்தவித ஒளிவுமறைவு இல்லாமல் வாழக்கூடியவர். முன்னதாக இவர் ஒருவருடன் லிவிண்டூகெதரில் இருந்தது கூட அனைவருக்கும் தெரியும். பின்பு அந்த காதல் முறிவுக்கு வந்ததையும் இவர் வெளிப்படையாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறியது:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் எந்த பேட்டியில் கலந்துகொண்டாலும் ஒரு கேள்வி நிச்சயமாக அவரது திருமணம் குறித்தே இருக்கும். பல நேரங்களில் அந்த கேள்விகளுக்கு அவ தக் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். சில நேரங்களில் பொருமையாக அதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன் எனக்கு திருமணம் என்ற எண்ணமே பயமாக உள்ளது. இத்தனை நாட்களாக நான் என்னை எப்படி இருக்க வேண்டும் என்று செதுக்கி உள்ளே. அப்படி இருக்கும் நான் திருமணம் என்ற ஒரு காரணத்திற்காக மற்றவர் உடன் இணைந்து எனது அனைத்து இயல்புகளையும் மாற்றி இருக்க வேண்டும் என்று யோசிக்க பயமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… கருப்பு படத்தில் என் கதாப்பாத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகை சுவாசிகா ஓபன் டாக்!