நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை மிரட்டல்

Actress Disha Patani: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவரது வீட்டில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை திஷா பதானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை மிரட்டல்

நடிகை திஷா பதானி

Published: 

13 Sep 2025 16:19 PM

 IST

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி (Actress Disha Patani). இவர் கடந்த 2015-  ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான லோஃபர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சுமார் 10 வருடங்களாக சினிமாவில் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அதிகப் படங்களில் நடித்த இவர் தமிழில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா (Kanguva Movie) படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை திஷா பதானி நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நடிகை திஷா பதானியின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினர்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்றுப் படங்களில் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இவரது படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது சமூக வலைதளத்தின் மூலமாகவும் ரசிகர்கள் திஷா பதானியின் வாழ்க்கையில் நிகழ்வுகளையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

திஷா பதானியின் உயிருக்கு ஆபத்து – காவல்துறை அதிகாரிகள் சொன்னது என்ன?

உத்திரபிரதேச மாநிலத்தில் நடிகை திஷா பதானியின் வீட்டின் அருகே இன்று அதிகாலை இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். வானத்தை நோக்கி தொடர்ந்து இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் இந்து துரவிகளை இழிவுப்படுத்தியதாக அவர்களின் ஆதரவாளர்கள் இந்த செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சனாதன தர்மத்தை நடிகை திஷா பதானி நடந்துகொண்டதாகவும் இப்படி இவர் தொடர்ந்து நடந்துகொண்டால் அவரின் உயிரிக்கு உத்தரவாதம் இல்லை என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது திஷா பதானியின் ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read… சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனக்கு முதலில் ஜோடியாக நடித்தது அந்த பிரபல நடிகைதான் – மிஷ்கின் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

நடிகை திஷா பதானியின் சமீபத்தி இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… அல்லூ அர்ஜுன் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் போஸ்ட்